குழந்தையின் அழுகையை நிறுத்தவும், தூங்க வைக்கவும் பாடப்படும் பாட்டு தாலாட்டு ஆகும்.தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும்.
தாலாட்டு பெயர் காரணம்
தால் என்பது நாவைக் குறிக்கும், நாவை ஆட்டி வரவழைக்கும் சத்தம் “தாலாட்டு” எனப்படுகிறது. ஆராரோ ஆராரோ என சந்தமிசைத்து பாடுவதால் ஆராட்டுதல் என்றும்வழங்கப்பட்டு வருகிறது.
தாலாட்டுப் பாடல்களில் தத்ரூபமான உவமை, உருவக அணிகள் கையாளப்பட்டுள்ளன.சிலநேரங்களில் தன் சொந்த சோகங்களையும் சுய வாழ்வின் அவலங்களையும், நேரடியாகவும் மறைமுகமாகவும், குறிப்பாகவும், குறியீடாகவும் சொல்ல தாலாட்டு பயன்பட்டது.
"தலைப் பிள்ளை பெற்றால் தானே வரும் தாலாட்டு" என்ற பழமொழியும்,"தாலாட்டு இசையின் தாயூற்று" என்ற பழமொழியும், "தாலாட்டும் ஒப்பாரியும் தனக்குத் தக்கன" என்ற பழமொழியும் வழக்கத்தில் உள்ளன.
இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடுவது அருகி வருகின்றது. இதை மீண்டும் வளர்க்கும் சிறு முயற்சி தான் இந்த ப்ளாக்.

No comments:
Post a Comment