சங்குடைத்து வில்வளைத்து, ராமர் ஜானகியை மாலையிட்டு,
மாலையிட்டு கைபிடித்து, மகிழம்பூ தேரேரி,
தேரசய மணிகுலுங்க, தேவாக்கள் பாடி வர,
ரதமசய மணிகுலுங்க, ராஜாக்கள் பாடி வர,
செல்லாமே இல்லாமே, சிதறுதய்யா பூந்தேறு,
ஓடாமே இல்லாம ஓடுதய்யா பூந்தேறு,
திட்டகிடாயமர்த்தி தெருவுக்கொரு பொங்கலிட்டு,
கைகேசி சொற்படிக்கு ராமர் கானகம் போய் சேர்ந்தாராம்.
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆரிரேரோ,
ஆரிரேரோ ஆராரோ ஆரிராரோ ஆராரோ

No comments:
Post a Comment