Wednesday, May 18, 2011

அகிலாண்ட ஈஸ்வரி தாலாட்டு


மதுரைக்கும் தெற்க்கே மான் அளையும் பொட்டலிலே,

சந்தனப் பொய்கையிலே சங்கிலிப் பின்னலிலே,

கர்ணரும் சீர்மகளும் கைத்தீர்த்தம் ஆடலிலே,

கடலில் நுரையொதுக்கி நீ கண்டெடுத்த ரத்தினமோ, 

பாசி நுரையொதுக்கி நீ பார்த்தெடுத்த ரத்தினமோ;

பாண்டியரும் சீர்மகளும் பனித்தீர்த்தம் ஆடலிலே, 

ஆதி சிவனாரும் அகிலாண்ட ஈஸ்வரியும் 

கூடிக்குலாவிக் கொடுத்துவிட்ட நாயகமோ, 

நாயகமோ,நவமணியோ நீ நல்ல குலவம்சமோ,

ஓசை நவமணியோ நீ ஒசந்த குலவம்சமோ,

சேரார் நவமணியோ நீ செட்டி குலவம்சமோ.



No comments:

Post a Comment